ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த குஜராத் மற்றும் சென்னை அணிக்கு இடையே நடந்த குவாலிஃபியர் 1 போட்டியில் குஜராத் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இப்போட்டியில் தோல்வியுற்ற குஜராத் அணி குவாலிஃபியர் 2 சுற்றுக்குச் சென்றது.
இந்த குவாலிஃபியர் 2 சுற்றுக்குச் செல்ல, கடந்த மே மாதம் 24 ஆம் தேதியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4 ஆம் இடங்களைப் பிடித்த லக்னோ – மும்பை அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடந்தது. இதில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்று குவாலிஃபியர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், இந்த 2வது குவாலிபயர் ஆட்டம் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதை வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
- Advertisement -