Sunday, May 28, 2023 7:05 pm

தங்க நகை வாங்கணும்னா இந்த நாட்களில் வாங்குங்க யோகம் பெருகும்

spot_img

தொடர்புடைய கதைகள்

கண் திருஷ்டி நீங்கிட

பொதுவாகக் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்குத்...

பூர்வீக சொத்தில் பிரச்சனையா அப்போ நீங்கள் செய்யவேண்டியது

உங்கள் பூர்வீக சொத்தில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்க, உங்களது வீட்டில்...

வெள்ளிக்கிழமையில் இத்தனை சிறப்பம்சங்களா ?

பொதுவாக வெள்ளிக் கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தது. இந்த நாளில் வரும்...

வைகுண்ட ஏகாதசியன்று பரமபதம் விளையாடுவது ஏன்?

இன்றளவிலும் நம் விட்டில் கூற கேட்டு இருப்போம். இன்று வைகுண்ட ஏகாதசி எல்லாரும்...
- Advertisement -

அட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல மடங்காகப் பெருகும்? எப்போது தங்கம் வாங்கலாம்? முதலில் உங்கள் லக்னத்தில் குரு இருக்கும் போது தங்க நகை வாங்கினால் அது மேலும் மேலும் விருத்தியாகும். ஆனால், கோட்சாரத்தில் குரு உங்களுடைய ஜென்ம லக்னத்தில் இருக்கும் காலகட்டங்களிலோ, அல்லது தங்கம் வாங்க வேண்டிய நாளில் லக்னத்தில் குரு இருக்கும்போது தங்கம் தாராளமாக வாங்கலாம். மேலும், நீங்கள் குரு ஓரையில் தங்க நகை வாங்கலாம்.

குருவிற்கு ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்கும் போது அதுவும் வளர்பிறைச் சந்திரன் ஆகி குரு சந்திர யோகத்தில் இருக்கும் போது, குரு ஹோரையில் தங்கம் வாங்கினால் தங்க நகை பல்கிப் பெருகும். இந்த குரு வர்கோத்தமம் ஆகும் காலங்களில் தங்க நகை தாராளமாக வாங்கலாம். அதைப்போல், ஒவ்வொரு மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில், குரு ஹோரையில் தங்கம் வாங்கலாம். வியாழக்கிழமையாக அன்றைய தினம் அமைந்து அஸ்த நட்சத்திரம் சேர்ந்தால் மிகச் சிறப்பு.

உங்கள் கோச்சாரத்தில் சூரியனும், சந்திரனும், குருவும் பலம் பெற்று ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் நேரத்தில் தாராளமாகத் தங்க நகை வாங்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி தங்க நகை வாங்க வேண்டாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்