தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தம்பி வீட்டிலும் மற்றும் நண்பர்கள் வீட்டிலும் இன்று காலையிலிருந்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், சென்னை, கோவை, கரூர் போன்ற ஊரில் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்கிலும் இந்த ஐடி ரெய்டு நடந்து வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜி அவர்களின் தம்பி வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது, திமுக ஆதரவாளர்கள் வருமான வரி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் நடத்தினர். இந்த சோதனையின் போது உடன் எந்த காவலரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து செந்தில் பாலாஜி அவர்கள், இந்த வருமான வரித்துறையினரின் சோதனையை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, சோதனை நடக்கும் இடங்களில் கட்சியினர் இருக்கக் கூடாது, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கட்சியினரிடம் தொலைப்பேசியில் அறிவுறுத்தியுள்ளேன் எனப் பேட்டியளித்துள்ளார். மேலும்,கரூர் எஸ்.பி அவர்கள், ” இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் எந்த தகவலும் தரவில்லை, பாதுகாப்பு எதுவும் கேட்கவில்லை” எனத் தெரிவித்தார்.