Friday, June 2, 2023 4:37 am

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

எக்ஸ்பிரஸ் நுழைவு விண்ணப்பதாரர்களுக்கான வகை அடிப்படையிலான தேர்வை கனடா தொடங்குகிறது

கனடா தனது தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும்...

சிங்கப்பூர் கோயிலில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகருக்கு சிறை

சிங்கப்பூரில் உள்ள புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி...

கூட்டணியை ஆட்சி அமைக்க பல்கேரிய அதிபர் கோரிக்கை

பல்கேரிய ஜனாதிபதி Rumen Radev, We Continue Change-Democratic Bulgaria (PP-DB)...
- Advertisement -

பாகிஸ்தானில் கடந்த மே 9 ஆம் தேதியில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல ஊழல் வழக்குகளில் ஜாமீன் கோரி ஆஜரானார். ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக ராணுவப் படை வரை கைது செய்தது. இதனால், இம்ரான் கான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் முழுவதும் வன்முறைச் சம்பவம் நிகழ்த்தினர். பின்னர் நீதிமன்றம் இவரை ஜாமீனில் விடுவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி உள்ளிட்ட 80 பேர் தற்போது பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. ஏனென்றால், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நடந்த வன்முறை தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பித்து உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இம்ரான்கான் உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதைத் தடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்