டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். ஆனால், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என 19 எதிர்க்கட்சிகள் கொடுத்துள்ள நிலையில், மத்திய அரசின் இவ்விழாவைப் புறக்கணிக்கப் போவதாக இந்த 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டன.
இந்நிலையில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் குடியரசுத் தலைவர் திறக்க வேண்டும் மக்களவை செயலகம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று வழக்கறிஞர் சி ஆர் ஜெயா சுகின் அவர்கள் தாக்கல் செய்தார். இந்த மனுவில் இந்திய அரசியல் அமைப்பை மத்திய அரசு மீறியுள்ளது என்றும், மோடி அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக்கொண்டு இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.
- Advertisement -