- Advertisement -
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த உரையில் ஒரு பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடியின சமூகத்தில் பிறப்பதோ மோசமான விஷயம் ஒன்றும் இல்லை என்றார்.
மேலும், அவர் ”என் கதை அனைவருக்கும் நன்றாகத் தெரியும். நான் பழங்குடியின சமூகத்தில் பிறந்த பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அதைப்போல், அனைத்து பெண்களும் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதற்கு தங்களின் திறனை தாங்களே அங்கீகரிப்பது மிகவும் முக்கியம்” எனப் பேசினார்.
- Advertisement -