Saturday, April 20, 2024 5:59 pm

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி கடந்த 2021 முதல் 2023 வரை விளையாடிய ஆஸ்திரேலியா, இந்தியா , தென்னாப்பிரிக்கா , இங்கிலாந்து, இலங்கை ,  நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் ஆகிய 9 அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையாக முதல் 9 இடத்தை பிடித்துள்ளது. இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது இடத்தில் இந்திய அணியும் உள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியனின் இறுதிப் போட்டி முதல் இரண்டு இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே வரும் ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காகப் பரிசுத் தொகையை அறிவித்தது ஐசிசி

அதன்படி, இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், இதில் தோற்கும் அணிக்கு ரூ. 6.5 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது என சற்றுமுன் தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்