தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முறை பயணமாகச் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்குப் பல தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். அங்கு சில தொழில் முதலீடு ஒப்பந்தங்களும் தமிழக அரசுடன் போடப்பட்டது. மேலும், சில நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்திடம் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதையடுத்து, சிங்கப்பூர்- மதுரைக்கு நேரடி விமானச் சேவை தொடங்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பாக ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் எனச் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்திடம் முதலமைச்சர் உறுதியளித்தார்
- Advertisement -