தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மதுரை பைபாஸ் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சுப்பிரமணியனின் 2-வது மகன் உதயசங்கர் (வயது 26) டீக்கடையில் இருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிள் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் 2 வடை பார்சல் வாங்கியுள்ளனர். பின்னர் இதற்குச் சட்னி தருமாறு கேட்டு உள்ளனர். ஆனால், அதற்கு உதயசங்கர் பார்சல் வடைக்குச் சட்னி கொடுப்பது இல்லை எனக் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, ஆத்திரம் அடைந்த அந்த 3 பேர் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் தாங்கள் வைத்துள்ள அரிவாளால் வெட்டியும், அங்கு கீழ கிடந்த கல்லாலும் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த உதயசங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- Advertisement -