Thursday, April 25, 2024 2:19 pm

குவாலிஃபியர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சென்னை அணி ஏற்கனவே குவாலிஃபியர் 1ல் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிக்குச் சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில், நேற்றிரவு 7.30 மணியளவில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் லக்னோ மற்றும் மும்பை ஆகிய இரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பௌலிங்கில் களமிறங்கியது லக்னோ அணி
இதையடுத்து, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. பின்னர், 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி,16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி குவாலிஃபயர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த குவாலிஃபயரில் மும்பை அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்