உலகமெங்கும் பல நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அது குறைந்த அளவிலும் சரி அல்லது அதிக அளவில் சரி தொடர்ந்து நில அதிர்வு ஏற்படுகிறது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியது, பூமியில் வெப்பம் அதிகரிப்பதாலும், பூமியின் தட்டுகள் நகருவதாலும் இந்த நிலநடுக்கம் வருகிறது என்றனர்.
அந்தவகையில், இன்று (மே 25) அதிகாலை மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் பனாமா மற்றும் கொலம்பியா எல்லையில் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பனாமா பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவானது என நில அதிர்வு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -