டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆனால், இதற்கு நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இவ்விழாவை புறக்கணித்தனர்.
இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க குடியரசுத் தலைவரை அழைக்காதது நவீன தீண்டாமை. இது சாதி பாகுபாடுகளை தீர்ப்பதற்கு பதிலாக, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் தீய வழக்கம் தொடர்கிறது என்றார். மேலும், அவர் ”பழங்குடி சமூகத்தை சேர்ந்த நாட்டின் முதல் குடிமகனை அழைக்காதது கண்டனத்திற்குரியது. இது அரசியல் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமாக தான் ஜக செயல்பட்டு வருகிறதுஎன்பது தெரிகிறது” எனக் கண்டனத்தை தெரிவித்தார்.