Wednesday, June 7, 2023 5:27 pm

அடி தூள் சுமார் 8 வருடத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை !

spot_img

தொடர்புடைய கதைகள்

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ'...

காதல் கொண்டேன் இரண்டாவது ஹீரோ ஆதியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் ஆதியாக நடித்ததன்...

சர்ச்சையில் சிக்கிய ஆதிபுருஷ் திரைப்பட நடிகை, இயக்குநர்

இந்தி இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இராமாயண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' ....

தளபதி 68 படத்திற்காக இரண்டு ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வெங்கட்பிரபு !

‘லியோ’ படத்துக்குப் பிறகு தளபதி விஜய்யின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு...
- Advertisement -

கரிஸ்மாடிக் ஹீரோ அஜித் குமார் ஞாயிற்றுக்கிழமை திடீர் அறிவிப்பை வெளியிட்டார், ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் உயர்தர மோட்டார் பைக்குகள் மற்றும் பான் இந்தியா மற்றும் உலக சுற்றுப்பயணங்களுக்கு வழிகாட்டிகளை வழங்கும் புதிய வணிகத்தைத் தொடங்கியுள்ளார். உற்சாகமடைந்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அறிவிப்பை கொண்டாடினர், அதே நேரத்தில் மாஸ் ஹீரோ தனது அடுத்த படப்பிடிப்பை எப்போது தொடங்குவார் என்பதை அறிய ஆர்வமாக இருந்தனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த படம் ‘விடாமுயற்சி’ என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் அஜீத் தனது புதிய தோற்றத்திற்கான சோதனை போட்டோஷூட்டை ஏற்கனவே நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ படங்களைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன், அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் படக்குழு வெளியிடவில்லை.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது லொகேஷன், மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தற்போது அஜித் அவருடன் பைக் ரைடு செய்த சுகத் என்ற நபருக்கு BMW F850 GS பைக்கை கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார். அதன் விலை சுமார் 15 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பைக் ரைடு சென்ற போது அதற்கான ஏற்பாடுகளை செய்தது அவர் தானாம்.

மகிழ் திருமேனி துணை வேடங்களில் பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஏழு கண்டங்களில் சுமார் பதினெட்டு மாதங்கள் ஆகக்கூடிய “ரைடு வித் மியூச்சுவல் ரெஸ்பெக்ட்” என்ற உலக பைக் பயணத்தை மீண்டும் தொடங்கப்போவதாக அஜித் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்