நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில், சென்னை பந்துவீச்சாளர் பத்திரனா பந்துவீச வந்தபோது அவரை தடுத்த நிறுத்தினர் நடுவர்கள். ஏனென்றால், பத்திரனா மேட்ச் நடக்கும் போது ஆடுகளத்தை விட்டு 9 நிமிடங்கள் வெளியே சென்றதால், அதற்கு ஈடான நேரத்திற்குக் களத்திலிருந்த பிறகுதான், பவுலிங் போட முடியும் என நடுவர்கள் கூறியதால் அப்போது பெரும் பரபரப்பு நிலவியது.
அப்போது, சென்னை அணியின் கேப்டன் தோனி தந்திரமாகச் செயல்பட்டு, நடுவர்கள் பத்திரனாவிடம் கூறியபோதே 4 நிமிடங்கள் முடிந்துவிட்ட நிலையில், இதுகுறித்து நடுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியே மீதமிருந்த 5 நிமிடத்தைக் கழித்த கேப்டன் தோனி. அதன் பிறகு பத்திரனா பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -