இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் நான்கு இடங்கள் குஜராத் , சென்னை, லக்னோ, மும்பை அணிகள் முறையாக இடம்பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதையடுத்து நேற்று (மே 23) நடைபெற்ற குவாலிஃபையர் 1 சுற்றில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குச் சென்றது.
இன்று (மே 24) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் லக்னோ – மும்மை அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 2ல் குஜராத் அணியுடன் மோதும். இதனால் யார் இப்போட்டியில் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- Advertisement -