நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே அப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், நேற்று (மே 23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே அப் குவாலிஃபையர் 1 சுற்றில், குஜராத் – சென்னை ஆகிய இரு அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. பின்னர் 173 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 15 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.