நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் குவாலிஃபையர் 1 சுற்றில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோனி தலைமையான சென்னை அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, அங்குள்ள வருணையாளர் சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் அடுத்த ஆண்டு சி எஸ்கே அணியுடன் விளையாடுவீர்களா எனக் கேட்டார். அதற்கு தோனி அவர்கள், “ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாடுவேனா? என்பது குறித்து முடிவு செய்ய, இன்னும் 8, 9 மாதங்கள் அவகாசம் உள்ளது என்றார்.
மேலும், அவர் ”டிசம்பரில் ஐபிஎல் ஏலம் வரவுள்ளது. ஏன் இப்போதே அதைப்பற்றி யோசித்து, தலைவலி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதேசமயம் விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்லது களத்திற்கு வெளியே ஏதேனும் பொறுப்பாக இருந்தாலும் சரி, எப்போதும் சி.எஸ்.கே. அணியோடு இருப்பேன் எனக் கூறியுள்ளார்.
- Advertisement -