இந்தியாவில் கடந்த சில வாரங்களாகப் பல இடங்களில் வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது. ஏனென்றால், தற்போது வளிமண்டலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இருக்கிறது என்றனர்.
இதன் காரணமாக, தற்போது இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என்றும், இன்று (மே 24) முதல் கேரளாவில் மழை தொடரும் எனத் தெரிவித்துள்ளனர். அதைப்போல், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா , சத்தீஸ்கர் போன்ற பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல் அளித்தனர். மேலும், இந்த 6 மாநிலங்களில் உள்ள மலைப் பகுதி ஒட்டிய இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவித்தனர்.
- Advertisement -