Wednesday, June 7, 2023 7:00 pm

போடு தகிட தகிட அஜித்தின் அடுத்த 5 படங்களை இயக்கும் அதிரடி இயக்குனர்கள் லிஸ்ட்.! தல தாறுமாறு!

spot_img

தொடர்புடைய கதைகள்

சித்தார்த்தின் டக்கர் படத்திலிருந்து வெளியான ரொமான்டிக் பாடலான ‘நீரா’ பாடல் இதோ !

நடிகர் சித்தார்த்தின் அடுத்த பெரிய படம் டக்கார், ஜூன் 9 ஆம்...

‘லால் சலாம்’ படப்பிடிப்பு பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பிற்காக...

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ'...

காதல் கொண்டேன் இரண்டாவது ஹீரோ ஆதியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் ஆதியாக நடித்ததன்...
- Advertisement -

அஜித் குமார் ஞாயிற்றுக்கிழமை திடீர் அறிவிப்பை வெளியிட்டார், ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் உயர்தர மோட்டார் பைக்குகள் மற்றும் பான் இந்தியா மற்றும் உலக சுற்றுப்பயணங்களுக்கு வழிகாட்டிகளை வழங்கும் புதிய வணிகத்தைத் தொடங்கியுள்ளார். உற்சாகமடைந்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அறிவிப்பை கொண்டாடினர், அதே நேரத்தில் மாஸ் ஹீரோ தனது அடுத்த படப்பிடிப்பை எப்போது தொடங்குவார் என்பதை அறிய ஆர்வமாக இருந்தனர்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது லொகேஷன், மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அஜித் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக இருக்கும் படங்களை இயக்கப்போகும் இயக்குனர்களின் லிஸ்ட் தற்காலிகமாக வெளிவந்துள்ளது. இதனைக் கேள்விப்பட்ட கோலிவுட் வட்டாரம் மிரண்டு போய் உள்ளது.

தற்போது தல அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி . லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்குஅனிருத் இசையமைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை.

விஷ்ணுவர்தனுக்கு பிறகு மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2 படத்தில் நடிக்க உள்ளார். தளபதி 68 படப்பிடிப்புக்குப் பிறகு வெங்கட் பிரபு மங்காத்தா 2 படத்தின் கதையை ரெடி செய்ய உள்ளாராம்.

வெங்கட் பிரபுவுக்கு பிறகு மீண்டும் தனது ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கத்தில் அதிரடி கலந்த கிராமத்து கதையில் ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தல அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் இயக்குனர்களின் லிஸ்டை கேட்ட வினியோகஸ்தர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்களாம். குறிப்பிட்ட இடைவெளியில் இந்த ஒவ்வொரு படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.

மேலும் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளதாகவும், விரைவில் அவர் கையெழுத்திடலாம் என்றும் கூறப்படுகிறது. மகிழ் திருமேனி துணை வேடங்களில் பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்