- Advertisement -
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் புதன்கிழமை மின்னல் தாக்கியதில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்ட 26 ஆடுகள் பலியாகின.
பேரிடர் செயல்பாட்டு மைய அதிகாரிகளின் கூற்றுப்படி, உத்தரகாசியின் பட்வாடி தொகுதியின் கமர் கிராமம் டோக் அருகே உள்ள காட்டில் ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.
இறந்த 26 ஆடுகளில் 19 ஆடுகள் மேய்ப்பவர் மகேந்திர சிங்குக்கும், 2 ஆடுகள் ஹக்ம் சிங்குக்கும், 5 ஆடுகள் நாராயண் சிங்குக்கும் சொந்தமானது என பேரிடர் செயல்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கி ஆடுகள் இறந்தது குறித்து தகவல் கிடைத்ததும் கால்நடை பராமரிப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
- Advertisement -