Friday, April 26, 2024 12:19 am

கடவுள் இருக்கும் இடம் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பூமியில் சிலகாலம் தங்கியிருந்தார் கடவுள். அவரிடம். “எனக்கு அது வேண்டும், இது வேண்டும்” என்று எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தனர் மக்கள். இதனால் சலித்துப் போன கடவுள், எத்தனையோ இடம் மாறினார். ஆனால் தொல்லை ஓயவில்லை. கடைசியாக ஒரு முடிவு செய்தார். மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே அது. தேவர்களிடம் கருத்துக் கேட்டார். இமயமலைக்குச் சென்று விடுங்கள்” என்றனர்.
சிலர், “அங்கு மனிதர்கள் எளிதாக வந்து விடுவார்களே “நிலாவுக்குச் செல்லுங்கள்” என்றார் வேறு சிலர். “எப்படியாவது அங்கும் வந்து விடுவார்கள், ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும்” என்றார் கடவுள். அவர்களின் ஆலோசனை எதுவும் கடவுளுக்கு திருப்தியளிக்கவில்லை. கடைசியாக ஞானி ஒருவர் யோசனை தெரிவிக்கக் கடவுளின் முகம் மலர்ந்தது. “யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரே இடம் மனிதனின் மனம் மட்டுமே. அதற்குள் தங்கிக் கொண்டால் யாராலும் உங்களுக்குத் தொல்லை இருக்காது” என்பது தான் அது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்