Sunday, June 4, 2023 2:01 am

கடவுள் இருக்கும் இடம் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது எதற்காக?

விநாயகர், ''தம் அப்பாவான ஈஸ்வரனைப் பார்த்து உன் சிரசையே எனக்குப் பலி...

ஆயுத பூஜை எதற்காக கொண்டாடுகிறோம்?

இந்த ஆயுத பூஜையின் வரலாறு மிகவும் சுவராசியமானது. பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று...

நல்ல ஆரோக்கியத்தை தரும் ரத சப்தமி வழிபாடு

ரத சப்தமி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து எருக்கு இலையைப்...

பணம் சம்பாதிக்க மந்திரம்

பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நாம் பலக்கடவுளை வேண்டியிருப்போம்.அப்படி வேண்டியும் சிலருக்கு...
பூமியில் சிலகாலம் தங்கியிருந்தார் கடவுள். அவரிடம். “எனக்கு அது வேண்டும், இது வேண்டும்” என்று எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தனர் மக்கள். இதனால் சலித்துப் போன கடவுள், எத்தனையோ இடம் மாறினார். ஆனால் தொல்லை ஓயவில்லை. கடைசியாக ஒரு முடிவு செய்தார். மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே அது. தேவர்களிடம் கருத்துக் கேட்டார். இமயமலைக்குச் சென்று விடுங்கள்” என்றனர்.
சிலர், “அங்கு மனிதர்கள் எளிதாக வந்து விடுவார்களே “நிலாவுக்குச் செல்லுங்கள்” என்றார் வேறு சிலர். “எப்படியாவது அங்கும் வந்து விடுவார்கள், ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும்” என்றார் கடவுள். அவர்களின் ஆலோசனை எதுவும் கடவுளுக்கு திருப்தியளிக்கவில்லை. கடைசியாக ஞானி ஒருவர் யோசனை தெரிவிக்கக் கடவுளின் முகம் மலர்ந்தது. “யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரே இடம் மனிதனின் மனம் மட்டுமே. அதற்குள் தங்கிக் கொண்டால் யாராலும் உங்களுக்குத் தொல்லை இருக்காது” என்பது தான் அது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்