டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறக்கப்பட உள்ளது. அதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்கவில்லை எனப் பல கட்சிகள் தங்களது எதிர்ப்பை இவ்விழாவைப் புறக்கணிப்பது மூலம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே தற்போது மோடி அரசு சீர்குலைத்துவிட்டது. அதைப்போல், குடியரசுத் தலைவர் ஒப்புதலின்றி நாடாளுமன்றமே செயல்பட முடியாது என்ற நிலை உள்ள போது, அவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றத்தைத் திறப்பது அரசியலமைப்பை மீறும் செயல் என 19 எதிர்க்கட்சிகள் தங்களது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -