Wednesday, June 7, 2023 6:40 pm

ஒட்டுமொத்த இணையதளத்தை அலறவிடும் அஜித்தின் புதிய லூக் .! செம்ம மாஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

சித்தார்த்தின் டக்கர் படத்திலிருந்து வெளியான ரொமான்டிக் பாடலான ‘நீரா’ பாடல் இதோ !

நடிகர் சித்தார்த்தின் அடுத்த பெரிய படம் டக்கார், ஜூன் 9 ஆம்...

‘லால் சலாம்’ படப்பிடிப்பு பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பிற்காக...

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ'...

காதல் கொண்டேன் இரண்டாவது ஹீரோ ஆதியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் ஆதியாக நடித்ததன்...
- Advertisement -

நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 62வது படத்தின் தலைப்பை விடா முயற்சி என படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என்ற கோஷத்துடன் இந்தப் படம் வருகிறது, மேலும் அஜித்தின் தொழில் வாழ்க்கையில் இது ஒரு உருவமாக இருந்தாலும், அதுவும் ரசிகர்களை அதிகம் கவர்ந்ததாகத் தெரியவில்லை.லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, ஆர்யா (மீகாமன்), அருண் விஜய் (தடையறா தாக்க, தடம்) மற்றும் உதயநிதி ஸ்டாலின் (கலை தலைவன்) ஆகியோரை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கிய ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படமாக விடா முயர்ச்சி உருவாகிறது.

`விடாமுயற்சி’ படத்தில் மகிழை அடுத்து, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் அனிருத் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார்கள். ஹீராயின்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், `விடா முயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்தது என்றும், படப்பிடிப்பை அடுத்த மாதம் தள்ளி வைத்திருக்கின்றனர் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு. இதுகுறித்து விசாரித்தில் கிடைத்த தகவல்கள் இனி.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகை பைக்கில் சுற்றி வரும் பயணத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்து, சென்னை திரும்பினார் அஜித். இன்று ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

அவரது உலக டூரான ‘Leg 1’ல் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளைச் சுற்றி வந்து, முதல் சுற்றை நிறைவு செய்த திருப்தியில் இருக்கும் அஜித், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மகிழ் திருமேனியிடம் ‘விடா முயற்சி’ யின் முழுக்கதையையும் கேட்டிருக்கிறார். லைகா, மகிழை கமிட் செய்யும் போதே, அஜித்துக்கான லைனை சொல்லியிருந்தார் மகிழ்.

அதைப் போல, லைகா மூலமாக அஜித்துக்கும் அந்த லைன் அப்போதே தெரியும் என்றாலும், லெக் ஒன் பயணத்தை முடித்த பிறகே, கதையைக் கேட்டிருக்கிறார் அஜித்.

`துணிவு’ பக்கா ஆக்‌ஷன் கதை என்றாலும், வெளிநாடுகளில் அந்தப் படத்தை லைகா தான் ரிலீஸ் செய்திருந்தது. படத்தை குடும்பம் குடும்பமாக வெளிநாடுகளில் மக்கள் கண்டுகளித்தார்கள் என்பதால், அதை மனதில் வைத்து ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்திழுக்கும் எமோஷன்களை வைக்கச் சொல்லி கதையில் சில இன்புட்ஸ்களை அஜித் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே கதையை இன்னும் செதுக்கி வருகிறார் மகிழ். ‘துணிவு’ படத்தில் லுக்கிற்கு நேரெதிர் தோற்றத்தில் அஜித் இருப்பார் என்றும், அதற்காக இப்போது அவர் ரெடியாகி வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.

`விடா முயற்சி’யில் மகிழை அடுத்து, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் அனிருத் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராயிடம் பேசி வந்தனர். ஆனால், தேதிகள் சரிபட்டு வராததால், இப்போது த்ரிஷாவிடம் பேசி வருவதாக சொல்கிறார்கள். த்ரிஷா, லைகாவின் தயாரிப்பில் ‘ராங்கி’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்திருப்பதாலும், லைகாவின் குட்புக்கில் இருப்பதாலும், ‘விடாமுயற்சி’யில் த்ரிஷா என்ட்ரி கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள்.

திட்டமிட்டபடி இன்று படப்பிடிப்பு வட இந்தியாவில் தொடங்கியிருக்க வேண்டும் என்றும், சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் வருமான வரி சோதனையை சந்தித்ததில், படப்பிடிப்பை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள் அனேகமாக ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக படத்தைக் கொண்டு வரவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

அஜீத் கடைசியாக துனிவு என்ற பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படத்தில் நடித்தார், அதில் டார்க் டெவில் என்ற கேரக்டரில் நடித்தார். எச் வினோத் இயக்கிய இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர், பால சரவணன் மற்றும் வீரா ஆகியோர் நடித்திருந்தனர். நட்சத்திர நடிகர்கள். துனிவு போனி கபூரால் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது .அந்த புகைப்படத்தில் அஜித் ஸ்லிம் ஆக உள்ளார் அதுமட்டும் இல்லாமல் விடாமுயற்சி படத்திற்க்காக அஜித் உடற்பயிற்சி செய்து வருகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்