Monday, April 15, 2024 1:36 am

சர்வதேச அளவில் அஜித் ஆரம்பித்திருக்கும் பைக் டூர் நிறுவனம் முதலீடு மட்டும் இம்புட்டு கோடியா?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் குமார் திறமைசாலி! அவர் எப்போதும் மோட்டார் சைக்கிள்கள் மீதான தனது ஆர்வத்தைப் பற்றி பேசுகிறார், மேலும் அவர் இந்தியா மற்றும் வெளிநாட்டு இடங்களுக்கு செல்லும் பைக் சுற்றுப்பயணங்களில் தெளிவாகத் தெரிகிறது. இப்போது, அவர் தனது ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்ற தயாராகிவிட்டார். மே 22 அன்று, அஜித் தனது புதிய நிறுவனமான ஏகே மோட்டோ ரைடு என்று அறிவித்தார், இது ஒரு சுற்றுலா நிறுவனமாகும். நடிகர் தனது நிறுவனத்துடன் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை விளக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டார். தற்போது வேலையில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் துவங்கி உள்ள புதிய நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் குமார் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த அஜித்குமாரின் அடுத்த கட்ட பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.அதில், “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது விடாமுயற்சி படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.” என சுரேஷ் சந்திரா ட்வீட் செய்திருந்தார்.

அஜித் நடிக்கும் அடுத்த விடாமுயற்சி படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்க உள்ளது.இந்நிலையில் நடிகர் அஜித்,”ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)” என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை துவங்கி உள்ளார். 17.05.2023 அன்று இந்த நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் இருவரும் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிறுவனம் 20,00,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித்குமாரின் திருவான்மியூர் இல்லத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட உள்ளது.அதென்ன AK மோட்டோ ரைடு? ‘இது என்ன கம்பெனி’ என்று ரசிகர்களுக்குக் குழப்பம்.

பொதுவாக, ஒரு படம் முடிந்ததும், பிஎம்டபிள்யூ பைக்கை எடுத்துக் கொண்டு இந்தியா முழுக்க ரைடு கிளம்பி விடுவார் அஜித். இப்போது தனது 62–வது படமான ‘விடாமுயற்சி’யை முடித்துவிட்டு, பைக் ரைடையும் விடாமல் தொடர வேண்டும்; அதுவும் உலகம் முழுக்க ஒரு ரைடு போக வேண்டும் என்று விரும்பினாராம். இந்தச் சூழ்நிலையில்தான் இப்படி ஓர் அறிவிப்பு.

எல்லோருக்குமே ஊர் சுற்ற… அதிலும் பைக்கில் ஊர் சுற்ற ஆசை இருக்கும்! ஆனால், வழிமுறைகள் தெரியாது! சிலர் ‘லடாக் போகணும்; இமயமலை ரைடு போகணும்’ என்று சொல்வதைப் பார்த்திருப்போம்; அவர்கள் இன்னமும் சொல்லிக் கொண்டே இருப்பதை மட்டும்தான் பார்த்துக் கொண்டே இருப்போம். காரணம், அதன் முதல்படியே பலருக்கும் தெரிந்திருக்காதுதானே! அந்த வழிமுறைகளையும், முறையான கைடன்ஸையும், ஏற்பாடுகளையும் அளிப்பதுதான் இந்த ஏகே மோட்டோ ரைடு நிறுவனம்.

இந்த அறிக்கையின்படி, ஏகே மோட்டோ ரைடு நிறுவனம் – பைக் ரைடர்களுக்குத் தாங்கள் விரும்பும் அட்வென்ச்சர் சூப்பர் டூரிங் பைக்குகளை அளிக்குமாம். அதாவது – பைக் இருப்பவர்கள், பைக் இல்லாதவர்கள் என எல்லோரும் இந்த டூரிங் நிறுவனம் மூலம் ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பு சம்பந்தமான ரைடிங் கியர்கள், ரைடு செல்லும்போது உங்களை வழிநடத்த பைக் ரைடிங்கில் பழம் தின்று கொட்டை போட்ட – பல பாஷைகள் பேசும் கைடுகள்…. எங்கே போகணும்; என்ன பார்க்கணும்; என்ன செய்யணும்; என்ன செய்யக் கூடாது என்கிற முறையான Do’s and Don’ts –களைச் சொல்லும் ஆலேசானைகள்…. என்று உங்கள் பைக் ரைடிங்கில் A to Z வரை இந்த AK Moto Ride ஆட்கள் உங்களுடன் இருப்பார்கள்.

இன்னும் சிலருக்கு ஊர் சுற்றிப் பார்ப்பது மட்டுமின்றி, அட்வென்ச்சர் சாலைகளில், வெறித்தனமான லேண்ட்ஸ்கேப்களில் த்ரில்லிங்காகப் பயணம் செய்யவும் பிடிக்கும். அப்படிப்பட்ட Exotic பயண அனுபவங்களையும் இந்த ஏகே மோட்டோ ரைடு தருமாம். இப்படிப்பட்ட ஒரு முழுமையான மோட்டார் சைக்கிள் டூரிங் நிறுவனத்தைத்தான் தொடங்கியிருக்கிறார் அஜித்.

இந்த மோட்டோ ரைடிங்குக்கான டூர் பேக்கேஜ்… பதிவு செய்வது எப்படி… ஒரு ரைடுக்கு எம்புட்டுச் செலவாகும்… AK Moto Ride–க்கு எந்தெந்த நாடுகளில் ஊர்களில் கிளை நிறுவனங்கள் இருக்கிறது என்பதுபோன்ற தகவல்கள் தெரியவில்லை.

எதற்கும் பைக்கில் ஊர் சுற்ற ரெடியாக இருக்கும் வாண்டர்லஸ்ட்கள்… ரெடியாக இருங்கள்! ‘தல’ கம்பெனியில் இருந்து டூர் போறதுனா சும்மாவா!இயக்குனர் எச் வினோத்தின் துணிவு படத்தில் அஜித்குமார் கடைசியாக நடித்திருந்தார். இப்படம் 2023 இல் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக முடிந்தது. அவர் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கைகோர்க்கவுள்ளார். பெயரிடப்படாத இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.

முன்னதாக, அவர் விக்னேஷ் சிவனுடன் பணியாற்றுவதாக இருந்தது. ஆனால், இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் அஜித் பயணத்தில் போது ஆதரவாக இருந்த நபருக்கு அஜித் விலை உயர்ந்த பைக்கை பரிசாக கொடுத்துள்ளார் இது தற்போது செம்ம வைரலாகி வருகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்