Wednesday, June 7, 2023 2:34 pm

தடுமாறி கழிவறையில் விழுந்து இளம் நடிகர் மரணம் ! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பசுபதி நடிப்பில் உருவான தண்டாட்டி படத்தின் டிரெய்லர் இதோ !

தண்டாட்டி, வரவிருக்கும் தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்களால் புதன்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது....

பிரபாஸின் பிரம்மாண்ட படமான ஆதிபுருஷின் புதிய டிரெய்லர் இதோ !

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி படத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரபலமடைந்த பிரபல நடிகர்...
- Advertisement -

நடிகரும், மாடலும், காஸ்டிங் ஒருங்கிணைப்பாளருமான ஆதித்யா சிங் ராஜ்புத், மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார் என்று காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 32.
நடிகரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.ட்விஸ்ட்டுகள், சர்ச்சைகள், சண்டைகள் என பரபரவென கடக்கும் Splits Villa நிகழ்ச்சியின் 9 ஆவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலிவுட் நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத்.

இவர் நேற்று மும்பை உள்ள அந்தேரி வீட்டில் சுயநினைவு நினைவு இழந்து கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் ஆதித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து இருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

ஆதித்யா சிங் உயிரிழந்தது தொடர்பாக அவரது நண்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேசியிருக்கிறார். அவர் பேசும் போது, ” கழிவறையில் வழுக்கி விழுந்து சுயநினைவை இழந்த ஆதித்யா சிங்கை நண்பர் ஒருவர் அங்குள்ள காவலாளி உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்.

கழிவறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம். காவல்துறை ஆதித்யா சிங் இறப்பு தொடர்பான விசாரணை தொடங்கி விட்டனர். நாங்கள் அனைவரும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து இருக்கிறோம்.” என்றார்.

மேலும் போதைப்பொருளை அதிகமாக எடுத்துக்கொண்டதால் அவர் இறந்து விட்டார் போன்ற தகவல்கள் வெளியானது தொடர்பாக அவரிடம் கேட்ட போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆதித்யா தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து வெளியே சென்று இருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

மாடலாக தன்னுடைய கலைபயணத்தை தொடங்கிய ஆதித்யா சிங் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பாலிவுட்டில் நடிகராக வலம் வந்தார். சோசியல் மீடியாவிலும் ஆதித்யா மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் கிராந்திவீர் மற்றும் மைனே காந்தி கோ நஹின் மாரா உள்ளிட்ட படங்களின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் ரியாலிட்டி ஷோ, ஸ்பிளிட்ஸ்வில்லா 9 இன் ஒரு பகுதியாகவும் இருந்தார். ஆதித்யா சிங் ராஜ்புத் லவ், ஆஷிகி, கோட் ரெட், ஆவாஸ் சீசன் 9, பேட் பாய் சீசன் 4 மற்றும் பிற டிவி திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்