கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், விஜய் நடிப்பிலும் வெளியானது மாஸ்டர் திரைப்படம் . இதில் விஜய் சேதுபதி, மாளவிக மோகன் எனப் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மேலும், இப்படம் அப்போது வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில், இந்த ‘மாஸ்டர்’ படத்திற்கு, சிறந்த நடிகருக்கான விருதை தற்போது வென்றுள்ளார் நடிகர் விஜய்.மேலும், அதே படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்குச் சிறந்த வில்லன் விருதும், தினேஷ் மாஸ்டருக்கு சிறந்த நடன இயக்குநருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.