Sunday, May 28, 2023 7:18 pm

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கும் பிரபல இயக்குனரின் மகள்.!

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
- Advertisement -

விடமுயற்சி என்பது மகிழ் திருமேனி இயக்கிய ஒரு அதிரடி திரைப்படம். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அஜித்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். அஜீத் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு 1 மே 2023 அன்று படத்தின் தலைப்பு விடாமுயற்சி போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. அஜித்தின் கடைசி 10 படங்களில் ஆறு படங்களின் தலைப்பு ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கியது என்ற ‘வி’ உணர்வை விடாமுயற்சி தொடர்கிறார்.

இந்நிலையில் தற்போதைக்கு படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதை தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. படத்தில் அஜித்துடன் யார் யார் நடிக்கிறார்கள், யார் கதாநாயகி போன்ற எந்த அப்டேட்டுகளும் இல்லாத நிலையில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தை 70 நாட்களில் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கேரக்டரை பற்றி அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இது தற்போது அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அஜித் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவர் கடைசியாக அசல் திரைப்படத்தில் தான் இரட்டை வேடத்தில் நடித்தார்.

இதனால் அஜித்துக்கு இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் இருக்கிறார்கள். கதாநாயகிகளுக்கான தேர்வு வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு அஜித் ஆஸ்திரேலியா கண்டத்திற்கு வேர்ல்டு டூர் செல்ல இருக்கிறார்.

கிட்டத்தட்ட 70 நாட்கள் நடக்க இருக்கும் இந்த படப்பிடிப்பில் கடைசி 40 நாட்களில் அஜித் குமார் கலந்து கொள்கிறார். மே இறுதி வாரத்தில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிவடைய இருக்கும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் இந்த படம் தளபதி விஜய்யின் லியோ படத்துடன் மோதுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே துணிவு மற்றும் வாரிசு நேருக்கு நேர் மோதிய நிலையில் இந்த எதிர்பார்ப்பு தற்போது உண்டாகி இருக்கிறது.

மேலும் பிரபல இயக்குனர் மகளான கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறபடுகிறது, படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரம் இருப்பதால் அதில் கல்யாணி நடிப்பார் என கூறபடுகிறது.விடமுயற்சி திரைப்படம் 31 டிசம்பர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்