Sunday, May 28, 2023 6:48 pm

ஜுன் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தமிழகத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்த நிலையில், தற்போது கோடை வெயில் மிக அதிகமாகக் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதமாகலாம் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோடை வெயில் காரணமாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் தள்ளி பள்ளிகள் திறக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் எனச் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்