இந்தியாவில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் யார் நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதியதில், 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது
இதையடுத்து, இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பெங்களூர் – குஜராத் அணிகள் மோதின. அதில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததால் , மும்பை அணி எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இதன்காரணமாக, வரும் மே 24ஆம் தேதியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.