Tuesday, June 6, 2023 7:18 am

தமிழகத்தில் இன்று (மே 22) 13 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
- Advertisement -

தமிழகப் பகுதியில் உள்ள மேலடுக்கில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (மே 22) 13 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், அதைப்போல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல் தமிழகத்தில் நாளை (மே 23) முதல் மே 26ஆம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்  என்றும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்