கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் திடீரென கனமழை பெய்துள்ளது. அப்போது இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்தது நினைத்து மக்கள் மகிழ்ந்தாலும், ஒரு பக்கம் இந்த மழையால் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.அதன்படி, பெங்களூர் நகரில் உள்ள கே ஆர் சர்க்கிள் பகுதியில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதையில் இந்த மழையால் வெள்ள நீர் தேங்கியது.
அப்போது அந்த சுரங்க பாதை வழியாக சென்ற எஸ்.யூ.வி கார் ஒன்று சென்றுள்ளது.அதில் மொத்தம் 6 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த கார் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி முழ்கி உள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த காரில் இருந்த ஐந்து பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒரு பெண் மட்டும் நீரில் மூழ்கி மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். இவரை மருத்துவமனையில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.