- Advertisement -
இந்தியாவில் உள்ள ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 5ஜி சேவையை சோதனை முறையில் தொடங்கியுள்ள நிலையில், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம் 4ஜி சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.அதற்காக பிஎஸ்என்எல்-லில் 4ஜி சேவைகள் இல்லை என்பது இல்லை, இந்த 4ஜி தற்போது முக்கிய நகரங்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் இந்த 4ஜி சேவையை பிஎஸ்என்எல் தற்போது உருவாக்குவதற்காக மேற்கொண்ட நடவடிக்கையின் படி, சுமார் 15,000 கோடி ஒப்பந்தத்தை பெற்றுள்ளது டாடா குழுமம். இதன் பிறகு விரைவில் இந்தியா முழுவதும் BSNL 4ஜி நெட்ஒர்க்கை பெறலாம் என அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
- Advertisement -