இந்தியாவில் தற்போது நடப்பாண்டு ஐபிஎல் லீக் தொடர் முடிவடைந்தது. இதில் குஜராத் , சென்னை , லக்னோ, மும்பை ஆகிய அணிகள் முறையாக முதல் நான்கு இடத்தை பெற்று பிளே சுற்றுக்கு சென்றுள்ளது. இதில் குவாலிஃபைர் 1 மற்றும் எலிமினேட்டர் சுற்று வரும் மே 23 மற்றும் மே 24 ஆம் தேதிகளில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க உள்ள ப்ளே ஆப் போட்டிகளை காண சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் ரசிகர்கள் கண்டிப்பாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க வேண்டும் என சற்றுமுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏனென்றால், ஐபிஎல் லீக் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற நாளில் டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் நாட்களில் இரவு 1 மணி வரை மெட்ரோ இயக்கப்படும் என்றும் இலவச பயணமும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது
- Advertisement -