இந்தியாவில் ஐபிஎல் 2023 விறுவிறுப்பாகப் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் லீக் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், குஜராத் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதையடுத்து எந்த 3 அணிகள் பிளே சுற்றுக்குத் தகுதி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றன.
ஆகவே, இந்த நடப்பு சீசனின் கடைசி 4 லீக் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறுகின்றன. இந்த போட்டியே பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லப்போகும் 3 அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், இப்போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே கூடியுள்ளது
- Advertisement -