இந்தியாவில் பா.ஜ ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2016 ஆம் ரூ .500 மற்றும் 1000 ரூபாய் ஒழித்து, புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தது. இந்நிலையில், தற்போது 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து மாற்றப்படுவதாக நேற்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. பின்னர் மக்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் மே 23 – செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் ஒரு நபர் நாளொன்றுக்கு ரூ.20000 மேல் மாற்றக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறது.
அதேசமயம், சொந்த கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்ய எந்த கட்டுப்படும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்தது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும், அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு போன்ற செய்திகள் பரவியது.
இதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தந்து ட்விட்டர் பக்கத்தில் ”டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்கக் கூடாது என்பது முற்றிலும் தவறான செய்தி. இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை” என ட்வீட் செய்துள்ளார்.
- Advertisement -