கர்நாடக நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதில் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார், பல அமைச்சர்கள் இன்று (மே 20) பெங்களூரில் பகல் 12 மணியளவில் பதவியேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இன்று பதவியேற்பதற்கு முன்பாக அமைச்சர்களின் பட்டியலை வெளியிடுவதாக சித்தராமையா அறிவித்திருந்தார். இதையடுத்து, கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையாவுடன் பதவியேற்கவுள்ள 8 அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி. இப்பட்டியலில் பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜர்கியோலி, எம்.பி.பாட்டீல், பிரியங்க் கார்கே, சமீர் அகமது கான், ராமலிங்க ரெட்டி ஆகியோர் இன்று கர்நாடக அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்
- Advertisement -