Friday, June 2, 2023 4:25 am

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் : இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஜூன் 1 முதல் கோவாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்க AI கேமராக்கள் அறிமுகம் !

தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)...

டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அவசர சட்டம்: ஸ்டாலினை கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார்

தேசிய தலைநகரில் நிர்வாக சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின்...

10ம் வகுப்பு பாட புத்தகத்தில் அதிரடி மாற்றங்கள் வருகிறது

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால், பள்ளி...

கர்நாடகாவில் கோர விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை சேர்ந்த பயிற்சி விமானம்...
இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புதிய 500 நோட்டுகள், 2000 நோட்டுகள், 200 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு பின் புழக்கத்தில் வந்தது. இந்நிலையில், நேற்று (மே 19) இரவு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது. மேலும்,  மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23-ம்தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இதன்காரணமாக, வங்கிகளில் கூட்டம் கூடுவதைத் தடுக்க ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மட்டுமே தனிநபர் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்திலிருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில், இனி வங்கிகள் அந்த நோட்டுகளைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்