ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ‘ஜி7 உச்சி மாநாடு’ தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகள் கலந்துகொண்டு வருகின்றனர். அந்தவகையில், இந்த ஜி 7 மாநாட்டிற்கு வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாநாடு நடைபெறும் அறைக்குள் நுழைந்ததும், தனது இருக்கைக்கு செல்லாமல் பிரதமர் மோடியை நோக்கி சென்றுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி, அவரை கட்டித் தழுவி வரவேற்றார். இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார். இது ரஷியா – உக்ரைன் போரை அடுத்து இரு தலைவர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும் என்பதால் பல தலைவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் கட்டப்பட்ட மார்பளவு காந்தி சிலையை திறந்து வைத்து மரியாதை செய்தார் பிரதமர் மோடி