Thursday, April 25, 2024 11:23 am

இதய பிரச்சனை ஏற்படுத்தும் பிஸ்கெட் : உஷார் மக்களே

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் சாப்பிடும் பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்கச் சேர்க்கப்படும் ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும். அதைப்போல், சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால் சர்க்கரை நோய், இதயப் பிரச்சனைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படலாம்.

மேலும், இந்த சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு, பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. இதன் காரணமாக, நம் உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் ஏற்படும், கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். நீங்கள் காலை உணவாக டீ, பாலுடன், ஸ்நாக்ஸாக பிஸ்கட்டை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல.

சிறுவயதிலேயே பிஸ்கட் சாப்பிடப் பழகுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதிலும் குறிப்பாக க்ரீம் பிஸ்கட்டை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவையாவும் செயற்கை நிறமிகள். ஆகவே, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பினால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். அதனால், பிரேக் நேரத்தில் சாப்பிடப் பழங்களைக் கொடுத்தனுப்பினால் அது பசியைத் தூண்டுவதுடன் கூடுதல் சத்துகளையும் கொடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்