திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிக பிரசித்தி பெற்ற லட்டு தான் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அதற்கவே நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், இந்த லட்டு பிடிப்பதில் இந்த நிர்வாக ஊழியர்களும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இணைந்தே இப்பணியை செய்து வருகின்றனர்.
தற்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல மாதங்களாக கணக்கில் காட்டாமல், 750 லட்டுகள் தினசரி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தான ஊழியர்களையும் மற்றும் ஒப்பந்த ஊழியரையும் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இக்கோயிலில் தினசரி 3.50 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, நாள்தோறும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.