நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடிய பெங்களூர் அணி, ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றது. இதில் அதிரடியாக விளையாடி விராட் கோலி சதம் அடித்தார். அதைப்போல் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த க்ளாசனும் 104 ரன் எடுத்து இருந்தார்.
இந்நிலையில், இதுவரை உள்ள ஐபிஎல் வரலாற்றில் , ஒரு போட்டியில் இரு அணி வீரர்கள் சதமடித்தது இதுவே முதல்முறையாம். அதைப்போல், ஐபிஎல் வரலாற்றில் 6 சதங்கள் விளாசி, அதிக சதம் விளாசியவர் என்ற க்றிஸ் கெய்லின் சாதனையைச் சமன் செய்துள்ளார் விராட் கோலி. மேலும், இந்த சதத்தை விராட் கோலி அடித்த போது அங்குள்ள ஆர்.சி.பி வீரர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
- Advertisement -