Sunday, June 4, 2023 3:36 am

பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஸ்வீடனில் உடலுறவை விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிப்பு

ஐரோப்பிய நாடான ஸ்வீடன்  உடலுறவு வைத்துக் கொள்வதை விளையாட்டாக அறிவித்து உத்தரவிடப்பட்டது....

ஒடிசா ரயில் விபத்து : உலக நாடுகள் இரங்கல்

நேற்று (ஜூன் 2) ஒடிசாவில் கோரமண்டல் பயணிகள் ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது....

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துகிறது

ஜூலை 1 முதல் ஆஸ்திரேலியா குறைந்தபட்ச ஊதியத்தை 5.75% உயர்த்தும், ஏனெனில்...

எக்ஸ்பிரஸ் நுழைவு விண்ணப்பதாரர்களுக்கான வகை அடிப்படையிலான தேர்வை கனடா தொடங்குகிறது

கனடா தனது தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும்...
- Advertisement -

பசிபிக் பிராந்தியத்தில் பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியாவில் இன்று (மே 19) அதிகாலை மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. மேலும், இந்த நில அதிர்வு பூமியிலிருந்து சுமார் 38கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

மேலும், இந்த நிலநடுக்கத்தால்  ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்ச் சேதம் குறித்து எந்த விவரமும் தற்போது வரை தெரியவில்லை. இதனிடையே இந்த நிலநடுக்கத்தால் பசிபிக் பகுதியில் 1 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் சாத்தியம் இருப்பதால் அங்குச் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், பிஜி உள்ளிட்ட கடல் பக்கத்தில் வாழும் மக்களை உயரமான இடங்களுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது.

ஆனால், இன்று (மே 19) பிற்பகலில் சுனாமி அச்சுறுத்தல் பெரும்பாலும் கடந்துவிட்டதாகக் புவியியல் துறை கூறியுள்ளது. அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்