நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி 100 ரன் எடுத்து சதம் விளாசினார். இவருடன் பார்ட்னர் சேர்ந்த டுபிளசிஸ் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலிருந்த மும்பை அணியை பின் நகர்த்திய பெங்களூர் அணி தற்போது அந்த 4வது இடத்தை கைப்பற்றியது
இந்நிலையில், கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் அவர்கள், நேற்று விராட், முதல் பந்தை எதிர்கொண்டபோதே அது அவருக்கான நாள் என்பது தெரிந்தது. இப்போட்டியில் விராட் கோலி, டுபிளசிஸ் இருவருமே நிதானமாக விளையாடினார்கள். இவர்கள் பெரிய ஷாட்களை எதிர்கொண்டது மட்டுமன்றி சிறந்த பார்ட்னர்ஷிப்பில் ரன்களும் ஓடினர். அவர்கள் பேட்டிங் செய்த விதத்திற்கு 186 ரன்கள் போதுமானது இல்லை என விராட்க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
- Advertisement -