Friday, June 2, 2023 2:24 am

10 வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் அதிகபட்சமாக 98.93% பேர் தேர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ட்விட்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வருக்கு நன்றி : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல்...

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati...

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான...
- Advertisement -

தமிழகத்தில் இன்று (மே 19) காலை 10 மணியளவில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 91.39 % சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதைப்போல், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,026 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதால், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45%, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.24%ஆக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) முதலிடம், 2ம் இடத்தில் சிவகங்கை ( 97.53%) 3ம் இடத்தில் விருதுநகர் (96.22%) உள்ளது. அதைப்போல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாக ஆங்கில பாடத்தில் 98.93% பேர் தேர்ச்சி, சமூக அறிவியல் – 95.83%, மொழிப்பாடம் – 95.55%, அறிவியல்- 95.75% , கணிதம் – 95.75% சதவீதமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகபட்சமாகக் கணிதத்தில் 3,649 பேர் 100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்