Monday, April 22, 2024 4:51 pm

அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் வாரத்துக்கு ஒருநாளோ, இரண்டு நாள்களோ பிரியாணி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அது ஹோட்டல் பிரியாணியாக இல்லாமல் இருப்பது பாதுகாப்பானது. ஏனென்றால், அதில் சுவையூட்டி, நிறமூட்டி, எண்ணெய் என எல்லாமே அளவுக்கதிகமாக சேர்க்கப்படும். அதிலும், இப்போதெல்லாம் பக்கெட் பிரியாணி, ஒருகிலோ பிரியாணி என்றெல்லாம் விற்கப்படுகிறது. இந்தமாதிரி அளவுக்கு மீறி ஒருவர் சாப்பிடுவது மிகவும் தவறானது.

மேலும், நாம் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக சமைத்த பிரியாணியைச் சாப்பிடுவது தான் ஆரோக்கியமானது. ஆனால், ஏற்கெனவே சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடி சூடுபடுத்தப்பட்ட பிரியாணி நிச்சயம் உடலுக்கு ஆரோக்கியக்கேட்டை ஏற்படுத்தும். அதிலும், இரவு நேரங்களில் பிரியாணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இரவு முதல் அடுத்த நாள் காலை வரை நம் உடலிலுள்ள செரிமான மண்டலத்துக்கு நிச்சயம்  ஓய்வு வேண்டும். அதைப்போல், ஒருவேளை இரவு பிரியாணி சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலை இட்லி, தோசை, வடை என வயிறு முட்டச் சாப்பிடுவது மிகவும் தவறு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்