Wednesday, June 7, 2023 6:19 pm

ஐபிஎல் 2023 : ஹைதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி

spot_img

தொடர்புடைய கதைகள்

WTC 2023 : கருப்புப் பட்டை அணிந்து விளையாட காரணம் இதுதான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்திய...

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7)...

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது! அஸ்வின் வெளியேறினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின்...

வரலாறு படைக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று...
ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டி நேற்று (மே 18) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. இந்த அணி அதிகபட்சமாக, ஹெய்ன்ரிச் கிளாசென் 104 ரன்களையும், ஹாரி ப்ரூக் 27 ரன்களையும் எடுத்துள்ளனர்.
இதையடுத்து 187 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை எளிதாக எட்டியது.இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இந்த அணி தரப்பில்  விராட் கோலி 100 ரன்களையும், டூ பிளஸில் 71 ரன்களையும் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 7 வெற்றி பெற்றதின் தற்போது 14 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்