Tuesday, June 6, 2023 9:07 am

தளபதியை தொடர்ந்து அஜித்துக்கு கொக்கி போடும் அனிருத் ! செவி சாய்ப்பரா அஜித்

spot_img

தொடர்புடைய கதைகள்

நிறங்கள் மூன்று படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் நிரங்கள் மூன்று படத்தின் ரீ-ரெக்கார்டிங்...

விடாமுயற்சி படத்தை பற்றிய அசத்தலான அப்டேட் இதோ !

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...

மோகனின் ஹரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

இதற்கு முன்பு 4554, யோகன் மற்றும் அடடே போன்ற படங்களில் பணியாற்றிய...
- Advertisement -

அஜித்குமார் தனது அடுத்த படமான மகிழ் திருமேனியுடன் இணைந்து தனது அடுத்த படமான தனது 62வது படத்திற்கு இப்போது விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. மே கடைசி வாரத்தில் திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைக்கு படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதை தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. படத்தில் அஜித்துடன் யார் யார் நடிக்கிறார்கள், யார் கதாநாயகி போன்ற எந்த அப்டேட்டுகளும் இல்லாத நிலையில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தை 70 நாட்களில் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கேரக்டரை பற்றி அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இது தற்போது அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அஜித் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவர் கடைசியாக அசல் திரைப்படத்தில் தான் இரட்டை வேடத்தில் நடித்தார்.

இதனால் அஜித்துக்கு இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் இருக்கிறார்கள். கதாநாயகிகளுக்கான தேர்வு வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு அஜித் ஆஸ்திரேலியா கண்டத்திற்கு வேர்ல்டு டூர் செல்ல இருக்கிறார்.

கிட்டத்தட்ட 70 நாட்கள் நடக்க இருக்கும் இந்த படப்பிடிப்பில் கடைசி 40 நாட்களில் அஜித் குமார் கலந்து கொள்கிறார். மே இறுதி வாரத்தில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிவடைய இருக்கும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் இந்த படம் தளபதி விஜய்யின் லியோ படத்துடன் மோதுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே துணிவு மற்றும் வாரிசு நேருக்கு நேர் மோதிய நிலையில் இந்த எதிர்பார்ப்பு தற்போது உண்டாகி இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் அஜித் பாட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.அனிருத் அஜித்தை வைத்து ஒரு பாடலை பாடும் படி அஜித்திடம் ஆர்வம் காட்டி வருகிறாராம் அனிருத் .இதுமட்டும் நடந்தால் யூடிடுப் வியூஸ் அள்ளும் என்பது உறுதி .“பில்லா 2ல் இருந்தே, அஜித் தனது படங்களின் தலைப்புகள் வினைச்சொல்லாக இருக்க வேண்டும், பெயர்ச்சொல்லாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளார். ஆரம்பம், வீரம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற பல தலைப்புகளில் அவருடைய படங்கள் வர ஆரம்பித்தன. கடந்த 10 ஆண்டுகளில் வேதாளம் மட்டும் விதிவிலக்காக இருந்தது. முன்னணி கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் வைத்திருப்பதை விட, ஒரு தலைப்பாக ரசிகர்களை ஊக்குவிக்கும் ஒரு அதிரடி வார்த்தையை வைத்திருப்பது சிறந்தது என்று நடிகர் நம்புகிறார், ”என்று ஒரு ஆதாரம் விளக்குகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்