கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10ல் நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 13 ஆம் நடந்தேறியது. பின்னர் இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் பெருபான்மையுடன் ஆட்சி பிடித்தது. இதையொட்டி, கர்நாடகவில் அடுத்த முதல்வராக கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக, பெங்களுருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கூட்டத்தில், கட்சியின் மேலிடமே முதல்வர் யார் என்பதை தேர்வு செய்யட்டும் என ஒருமனதாக தீர்மானம் எடுத்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இவ்விருவரையும் டெல்லி அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை மறுதினம் பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
மேலும், கர்நாடகாவின் துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் பெங்களுருவில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவித்தனர்.