பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானியின் ஒருவரான பிரதீப் குருல்கர் மீது பாகிஸ்தான் ஏஜெண்டுடன் ரகசிய தகவல்களைப் பரிமாறி கொண்டதாக சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) தெரிவித்திருந்தது. ஆகவே, இது குறித்து இவரை கைது செய்து விசாரித்த போது அவர் பெண் ஆசையில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
மேலும், இந்த விஞ்ஞானி பிரதீப் குருல்கரிடம் பல உண்மையை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை நீதிமன்றத்தில் தற்போது மனு அனுப்பியுள்ளது. அதேசமயம், இந்த பிரதீப் குருல்கர் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பில் உள்ளதால், இதில் அந்த அமைப்பின் பங்கு உள்ளதா என பிரதமர், உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது